நடைமுறை குறித்த விதிகளை வகுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளைத் தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, இந்த விதிகளை ரத்துசெய்யக் கோரியும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று (ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசு வழக்கறிஞர்கள் பதவிக்குத் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல் அரசுத் தலைமை வழக்கறிஞரே தேர்வு செய்து நியமிக்கிறார்” என மனுதாரர் வசந்தகுமார் குற்றம்சாட்டினார்.
அரசுத் தலைமை வழக்கறிஞர் தேர்வு செய்து தமிழக அரசுக்குப் பட்டியல் அனுப்புவதாகவும் அந்தப் பட்டியலைத் தலைமை வழக்கறிஞர் மற்றும் பொதுத் துறை, உள்துறை மற்றும் சட்டத் துறைச் செயலாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து நியமிப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன. ஆனால் நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை. அதனால், விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும்” எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக