`பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து டீசலுக்கு இணையான எந்திர ஆயில்!' அசத்தும் பள்ளபட்டி குழுவினர் இன்று உலகளாவிய அளவில் பெரும் பிரச்னையாக இருப்பது பிளாஸ்டிக்குகள்தான். நீக்கமற எங்கும் நிறைந்து, மண்ணுக்கும் மனிதனுக்கும் பெரும் கேடு விளைவித்துக் காெண்டிருக்கிறது. அதுபற்றிய பாேதிய விழிப்பு உணர்வு இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பிளாஸ்டிக் குப்பையிலிருந்து `PYRO OIL' என்னும் டீசலைவிட தரமான ஆயிலை  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

`பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து டீசலுக்கு இணையான எந்திர ஆயில்!' அசத்தும் பள்ளபட்டி குழுவினர் இன்று உலகளாவிய அளவில் பெரும் பிரச்னையாக இருப்பது பிளாஸ்டிக்குகள்தான். நீக்கமற எங்கும் நிறைந்து, மண்ணுக்கும் மனிதனுக்கும் பெரும் கேடு விளைவித்துக் காெண்டிருக்கிறது. அதுபற்றிய பாேதிய விழிப்பு உணர்வு இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பிளாஸ்டிக் குப்பையிலிருந்து `PYRO OIL' என்னும் டீசலைவிட தரமான ஆயிலை 



இந்நிலையில், பிளாஸ்டிக் குப்பையிலிருந்து `PYRO OIL' என்னும் டீசலைவிட தரமான ஆயிலை உருவாக்கும் வழிமுறையை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த காஜா மாெய்தீன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு வெற்றியடையும் பட்சத்தில், பிளாஸ்டிக்குகளும் ஒழிக்கப்படும், ஆயிலும் கிடைக்கும் என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலன் கிடைக்கும்.
இந்த 'PYRO OIL' ஆயில் உருவாக்கும் எந்திரத்தை சில ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் காஜாமொய்தீன் சில ஆண்டுகளாய் சொந்த முயற்சியில் பலகட்ட சோதனைகளுக்குப் பின்னர் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து

காஜாமொய்தீனிடம் பேசினாேம். ``இந்தத் திட்டம் பிளாஸ்டிக் மறுசுழற்சி முறைதான். இதில் பிளாஸ்டிக் எரிக்கப்படுவதில்லை. பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவிலிருந்து எடுக்கப்படுவது `PYRO OIL' என்ற எரி திரவம். இந்தத் திரவம் டீசலைவிட தரமானது. டீசலைவிட விலை குறைவானது. டீசலுக்கு நிகரானது. இது உலகத்தின் முதல்முறையாக தென்னிந்தியாவிலிருந்து, கரூர் மாவட்டத்தின் பள்ளப்பட்டியில் உருவாக்கப்படுவது என்பது இந்த ஊருக்கும், தமிழகத்துக்கும் பெருமைதான். உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியாமல் சிலர் எரித்து விடுகின்றனர். எரிப்பதால் கருநிற வாயுக்கள் வெளியேறி சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் கலந்து கேன்சர் நோயை உருவாக்கிவிடும்.

எனவே, பிளாஸ்டிக்கை மறுசுழற்சியாகப் பயன்படுத்த எண்ணி நான் துவக்கியதுதான் இந்த முயற்சி. கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக்கை கூழாக்கி அதை மறுபொருளுக்குப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். இப்போது நண்பர்களின் உதவியுடன் `PYRO OIL' ஆய்வுசெய்து பொதுவெளியில் கொண்டுவந்துள்ளோம். இதனால்,எனது ஊரான பள்ளப்பட்டி பேரூராட்சியின் குப்பைகள் மறுசுழச்சியாக்கப்பட்டு, அவை `PYRO OIL' எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதை தமிழகத்தின் அனைத்து மாவட்டத்துக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதாேடு, இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக சிந்தித்து ஆய்வு செய்யப்பட்டு பல தொழில்நுட்ப வல்லுநர்களிடம் நேரடியாக செயல்வடிமுறை கூறி பாராட்டை பெற்றது மட்டுமல்ல, இந்தத் தொழில்நுட்பத்தால் தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளற்ற மாநிலமாகவும் இந்த ஆயிலை மாற்று எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளோம்.

இதன் பார்முலா என்னுடையது. இதற்காக பொருளாதாரம் ஒருங்கிணைப்பு, ஆய்வு மற்றும் செயல்பாட்டில் உறுதுணையாக பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஜியாவுல் ஹக் மற்றும் ரியாஜூல் ஆகிய இருவரும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து பள்ளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரைச் சந்தித்து குப்பைக் கழிவுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளோம். கரூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விரைவில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஆயில் தயாரிக்கும் நேரடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here