உலகில் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ள மல்யுத்தப் போட்டியான WWEஇல் இந்திய வீரர் ஜின்தர் மஹால் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் WWE மல்யுத்தப் போட்டி உலகளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது. அதில் இந்தியா சார்பில் பெரும்பாலான வீரர்கள் கலந்து கொண்டது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வீரர் கிரேட் கஹாளி என்பவர் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து கனடாவில் வசித்து வரும் ஜின்தர் மஹால் WWE மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
யுவராஜ் சிங் என்ற பெயரை WWEஇல் ஜின்தர் மஹால் என பெயர் மாற்றம் செய்துகொண்ட அவர், சமீபத்தில் நடைபெற்ற WWE சாம்பியன் சிப் ரெஸில்மேனியாவில் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் WWE சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு விதமான சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ரெஸில்மேனியா போட்டியில் ரேண்டி ஆர்டூன், பாப்பி ரூட் மற்றும் ருசேவ் உடன் மோதிய யுவராஜ் சிங் மோதி இந்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக