*ЁЯМРЁЯМРрокிро│ро╕் 1, 2 ро╡роХுрок்рокுроХ்роХு 2 рокுродிроп рокாроЯроЩ்роХро│்* рокிро│ро╕் 1, рокிро│ро╕் 2 ро╡роХுрок்рокுроХро│ுроХ்роХு, роЗрои்род роЖрог்роЯு рооுродро▓், роХрогிройி родொроЯро░்рокாрой, роЗро░рог் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*ЁЯМРЁЯМРрокிро│ро╕் 1, 2 ро╡роХுрок்рокுроХ்роХு 2 рокுродிроп рокாроЯроЩ்роХро│்* рокிро│ро╕் 1, рокிро│ро╕் 2 ро╡роХுрок்рокுроХро│ுроХ்роХு, роЗрои்род роЖрог்роЯு рооுродро▓், роХрогிройி родொроЯро░்рокாрой, роЗро░рог்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

தமிழக பள்ளி கல்வியில், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், 'ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இந்த ஆண்டே, இந்த புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வர உள்ளன. அதாவது, 'கம்யூட்டர் சயின்ஸ்' பிரிவுக்கு, 'கணினி அறிவியல்' என்ற பாடம், தொடர்ந்து நடத்தப்படும்.

ஆனால், வரலாறு, பொருளியல், வணிக கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம், புதிதாக சேர்க்கப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகை தொழிற்கல்வி குரூப்களுக்கும், 'கணினி தொழில்நுட்பம்' என்ற, பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடங்கள், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

роХро░ுрод்родுро░ைропிроЯுроХ

Subscribe Here