*தமிழகத்தின் 12 உயர் கல்வி நிறுவனங்களுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார்*
*இதுகுறித்து திங்கள்கிழமை அவர் கூறியதாவது*
*தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன் பழகன் முன்னிலையில், காரைக்குடியில் ஒரே நேரத்தில் 12 உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அழகப்பா பல்கலைக்கழகம் அண்மையில் செய்து கொண்டுள்ளது*
*இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலகின் மிகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குள் செய்யப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இது முதன்முறையாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன*
*இது ஒரு முன் மாதிரி ஆகும். ஒப்பந்தத்தின்படி குறுகிய கால கல்வித் திட்டங்களை அடையாளம் கண்டு ஆராய்ச்சி மேற்கொள்வது, ஒருங்கிணைந்து ஆராய்ச்சியை நடத்துவது என்பது இதன் முக்கிய நோக்கங்களாகும்*
*மேலும் தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தவும், மாணவர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், இந்நிறுவனங்களுக்கிடையே பொதுவான நலன்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்தப்பட்ட நூலகம் மற்றும் ஆய்வக வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் வழிவகுக்கும்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக