பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் திருச்சி உள்பட டெல்டாவில் சரிந்தது ஏன்?_* திருச்சி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 244 பள்ளிகளை சேர்ந்த 16,065  மாணவர்கள், 19,151 மாணவிகள் என மொத்தம் 35,216 பேர் எழுதினர்.  இதில் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் திருச்சி உள்பட டெல்டாவில் சரிந்தது ஏன்?_* திருச்சி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 244 பள்ளிகளை சேர்ந்த 16,065  மாணவர்கள், 19,151 மாணவிகள் என மொத்தம் 35,216 பேர் எழுதினர்.  இதில்

திருச்சி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 244 பள்ளிகளை சேர்ந்த 16,065  மாணவர்கள், 19,151 மாணவிகள் என மொத்தம் 35,216 பேர் எழுதினர்.  இதில் 14,269 மாணவர்கள், 18,446 மாணவிகள் உள்பட 32,715 பேர் தேர்ச்சி  பெற்றனர். 2,501 பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் தேர்ச்சி 92.90  சதவீதம் ஆகும். தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் கடந்த ஆண்டு 12வது  இடத்திலிருந்த திருச்சி இந்தாண்டு 15வது இடத்துக்கு  தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி கடந்தாண்டை விட 2.6 சதவீதம்  குறைந்துள்ளது.தஞ்சை  மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை என்று 3  கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 29,247 பேர் தேர்வெழுதியதில்  26,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.25 சதவீதம். கடந்தாண்டு  92.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 2.22  சதவீதம் தேர்ச்சி குறைவாகும். கடந்த ஆண்டு தஞ்சை  மாவட்டம் 19வது  இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 20வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை  மாவட்டத்தில் 9,723 மாணவர்கள், 11,382 மாணவிகள் என மொத்தம் 21,105  பேர் தேர்வு எழுதினர். இதில் 8,097 மாணவர்கள், 10,588 மாணவிகள் என  மொத்தம் 18,685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 88.53 சதவீதம்  ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.63 சதவீதம் குறைவு.நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. நாகை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 3,272 மாணவர்களும், 4,326 மாணவிகளும் ஆக மொத்தம் 7,598 மாணவ, மாணவிகள் எழுதினர். 2,811 மாணவர்களும், 3,859 மாணவிகளும் ஆக மொத்தம் 6,670 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.79 சதவீத தேர்ச்சி. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 4,419 மாணவர்களும், 5,941 மாணவிகளும் ஆக மொத்தம் 10,360 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர்.இவர்களில் 3,520 மாணவர்களும், 5,248 மாணவிகளும் ஆக மொத்தம் 8,768 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.63 சதவீத தேர்ச்சி. மொத்தம் மாவட்டத்தில் 85.97 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 2.11 தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 81.03% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில்  133 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 6,050 மாணவர்கள், 8,175 மாணவிகள் என மொத்தம் 14,225 பேர் எழுதினர். இதில் 4,920 மாணவர்கள், 7,241 மாணவிகள் என மொத்தம் 12, 161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.49 சதவீதத் தேர்ச்சி. கடந்தாண்டு 88.77 சதவீதத்தை காட்டிலும் இந்தாண்டு 3.28 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 15 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு சுயநிதி மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 19 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன.கரூர் மாவட்டத்தில் 11,277 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 93.85 சதவீதம். கடந்தாண்டை விட 1.11 சதவீதம் குறைவாக மாநில அளவில் இந்தாண்டும் 13வது இடத்தில்தான் உள்ளது. மாவட்டத்தில் 50 அரசுப் பள்ளிகளில் இருந்து 5235 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4724 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.24. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 2014-15 மற்றும் 2017-18ம் ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் ஒரு சதவீதம் குறைவாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 8318 மாணவர்களில் 7102 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 85.38 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் தேர்வு விகிதம் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 26வது இடத்திலிருந்த அரியலூர் மாவட்டம் இந்தாண்டு கடைசிக்கு தள்ளப்பட்டு 31வது இடத்தை பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்தள்ளது. டெல்டா மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, நீட்தேர்வு, கடுமையான வினாத்தாள் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதே காரணங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். இதனால், மாவட்ட நிர்வாகங்கள் கல்வித்துறையின் மீது கூடுதல் அக்கறை காட்டியிருக்க வேண்டும். என்ற கருத்தும் எழுந்துள்ளது. 

பெரம்பலூர் முன்னேற்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 70 மேல்நிலை  பள்ளிகளில் படித்த 4,370 மாணவர்கள், 4,495 மாணவிகள் என மொத்தம்  8,865 பேர் எழுதி னர். இவர்களில் 4,063 மாணவர்கள், 4,279 மாணவிகள் என  மொத்தம் 8,342 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் தேர்ச்சி  சதவீதம் 94.10. இதன் மூலம் மாநிலஅளவில் பெரம்பலூர் மாவட்டம்  தேர்ச்சி விகிதத்தில் 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு  பெரம்பலூர் மாவட்டம் 93.54 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலஅளவில்  15வது இடம் பெற்றிருந்தது. நடப்பாண்டு 3 இடம் முன்னேறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here