*தமிழ் இணைய செய்திகள்*
கர்நாடகத்தில் வென்றதன் மூலம் 21 மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பாஜக_*
பெங்களூரு: கர்நாடகத்தில் வென்றதன் மூலம் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உ.பி, ராஜஸ்தான், ம.பி,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்து பாஜக ஆட்சி செய்கிறது. காஷ்மீர், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றுள்ளது.
கர்நாடக வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பணம்: தமிழிசை சவுந்தரராஜன்_*
சென்னை: கர்நாடக தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக வெற்றி: எடியூரப்பா டெல்லி பயணம்_*
பெங்களூரு: பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க எடியூரப்பா டெல்லி செல்லவுள்ளார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிப்பதை அடுத்து பிரதமரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரதமர் மோடியின் பரப்புரையே பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது: நிர்மலா சீதாராமன்_*
*www.pk41news.blogspot.com*
டெல்லி: பிரதமர் மோடியின் பரப்புரையே பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்துள்ளது என மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சியே நாட்டிற்கு முக்கியம் என்ற பிரதமரின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்கு கிடைத்த ஆதரவு: துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி_*
சென்னை: கர்நாடகத்தில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்கு கிடைத்த ஆதரவு என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் நல்ல தீர்வு வரும் என்று கூறினார். கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா வுக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து_*
சென்னை: கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.pk41news.blogspot.com
கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்
பாஜக - 109 முன்னிலை - 78 வெற்றி - 31
காங்கிரஸ் - 72 முன்னிலை - 54 வெற்றி - 18
ம.ஜ.தளம் - 38 முன்னிலை - 31 வெற்றி - 07
மற்றவை - 03
மொத்தம் - 222
*தமீழ் இணைய செய்திகள்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக