ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை இதுவாகும். புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்தச் சாலையை உருவாக்க, 3 ஆண்டுகள் ஆனது. 135 கி.மீ தூரம் உள்ள சாலையின் தொடக்கத்தில் எடை சோதிக்கும் சென்சார் கருவிகள் உள்ளன. நெடுஞ்சாலையில் சூரிய மின் சக்தியில் இயங்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 100 வாகனங்களைச் சோதிக்க முடியும். மேலும் அதிக எடையுள்ள வாகனங்கள், ஸ்மார்ட் நெடுஞ்சாலைக்குள் அனுமதிக்கப்படாது. சாலையெங்கும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு, சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு மற்ற சாலைகளை விட, 25% அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் நாம் செல்லும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக