ரஷ்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள மிதக்கும் அணுமின் நிலையம் நேற்றுமுன் தினம் (மே 19) பயணத்தை தொடங்கியுள்ளது.
இது உலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையம் ஆகும்.கடந்த ஒருமாத காலமாக ரஷ்யாவில் இயங்கிவந்த இந்த அணுமின் நிலையம், முர்மன்ஸ்க் நகரில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளமும்,30 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக பனிப் பிரதேசமான ஆர்டிக் பகுதிக்குச் சென்று அங்குள்ள நகரமான பெவெக் பகுதியிலிருந்து அப்பகுதி கிராமங்களுக்கு மின்சார சேவையை அளிக்க இருக்கிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்னோபில் அணுமின் நிலைய விபத்திற்குப் பின், உலகம் முழுவதும் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், ”பன்னாட்டு விதிமுறைகளின்படியே அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டிருப்பதாக” ரஷ்யா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக