சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பள்ளி மாணவர் களுக்கான இலவச யோகா பயிற்சி இன்று தொடங்குகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பள்ளி மாணவர் களுக்கு இலவச கோடைக்கால யோகா பயிற்சி நடைபெற உள்ளது.
இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை தினமும் பகல் 11 மணி முதல் 12 மணி வரை பயிற்சி நடக்கிறது. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
படிப்பில் ஆர்வம் ஏற்பட, தன்னம்பிக்கை வளர, சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி மேம்பட, தேவையற்ற பயங்கள் நீங்க (தேர்வு பயம் உட்பட), மன அழுத்தம் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட, பார்வை கோளாறு நீங்க இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-26222516 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக