லண்டனில் நடைபெற்ற ஒன் ப்ளஸ் 6 அறிமுக விழாவின்போது அந்த நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் ஹெட்போனான ஒன் ப்ளஸ் ‘புல்லட் வயர்லெஸ்’ ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பேசிய ஒன் ப்ளஸ் நிறுவனத் தலைவர் கார்ல் பேய், “வயர்லெஸ் ஹெட்போன் தயாரிப்பில் கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு சோதனைகளை உட்படுத்தி வந்தோம். அதன்படி தற்போது 3.5 mm ஜாக் கொண்ட இந்த வயர்லெஸ் ஹெட்போனை வடிவமைத்துள்ளோம்.
பொதுவாக வயர்லெஸ் ஹெட்போன்களில் சார்ஜிங் பெரிய குறைபாடாக இருக்கும். ஆனால், இந்த புல்லட் வயர்லெஸில் அந்தக் கவலை கிடையாது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை பேட்டரி திறன் நீடிக்கும். அதில் USB Type-C போர்ட் உள்ளதால் எல்லா வகையான Type-C கேபிள்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகின்ற Qualcomm’s aptX தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள், வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 4.1 இணைப்புடன் வருகிறது.
கூகுள் அசிஸ்டண்டருடன் (Google Assistant) வரும் இந்த ஒன் ப்ளஸ் வயர்லெஸ் ஹெட்போன் மூலம் பயனர்கள் கேட்கும் இசையை மாற்றவும் மேலும் கால்கள் செய்யவும் உதவும்.
இந்த ஹெட்போனின் விலை 3,999 ரூபாய் என்றும், இது ஜூன் மாதத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்றும் ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக