புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நான்கு மையங்களில் 7 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நான்கு மையங்களில் 7 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கல்

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் குறித்து அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 21) நடந்தது.

அப்போது பேசிய அமைச்சர், ”புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நான்கு மையங்களில் 7 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கல்வித் துறையின் புதிய மாற்றங்களுக்காக சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்கள் எண்ணிக்கை சரியாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்பு பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் சேர 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here