உடல் சூட்டைத் தணிக்கும் சிறந்த மருந்தான வெந்தயத்தைத் துவையலாக இட்லிக்கு, தோசைக்குச் செய்து சாப்பிடலாம் வாங்க..
தேவையான பொருள்கள்:
வெந்தயம் – 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லம் – விருப்பப்பட்டால், நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்த வெந்தயம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்துடன் உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
சிறிது வெல்லத்தைப் பொடி செய்து இதில் சேர்க்கவும். வெந்தயத்தை அதிகம் வறுத்தால் கசந்துவிடும். பக்குவமாக வறுத்து எடுத்தால் சிறிதும் கசக்காது.. கசப்பாக இருந்தால் சிறிது வெல்லம் சேர்க்கவும். சுவையான, சத்துகள் மிகுந்த வெந்தயத் துவையல் தயார்.
பயன்கள்:
இந்தத் துவையலைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக