"சௌதியில் அழகு நிலையத்தில் வரவேற்பறையில் வேலை, மாத சம்பளம் ரூ.40,000 என்று கூறியதால் போன வருடம் வந்தேன். முதல் மூன்று மாதம் மட்டும் ஒரு வீட்டில் தங்கி அரபு மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முகவர் ஆனந்த் சொன்னார். கொஞ்ச நாட்களிலேயே முஸ்கான் என்ற பெண் முகவர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு எங்களின் மற்ற தோழிகளிடம் சௌதி வேலையில் நல்ல சம்பளம் கிடைப்பதாகக் கூறி, அவர்களையும் சௌதிக்கு வரவழைக்கவேண்டும் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து மற்றொரு பெண்ணிடம் பொய் சொன்னேன்.''
அழகான பணி என்று ஆசையுடன் செளதிக்கு வந்து வீட்டுப்பணிப்பெண் என்ற வலையில் மாட்டிக் கொண்ட கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரி சுந்தரி, தழுதழுக்கும் குரலில் தமிழிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
இப்படி ஏராளமான தமிழ் பெண் பட்டதாரிகள் செளதியில் சிக்கிக் கொண்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக