தமிழைப் போற்றிய குடியரசுத் தலைவர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழைப் போற்றிய குடியரசுத் தலைவர்!

‘உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி’ என்று சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று (மே 4) தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் வேலூர் சிஎம்சி கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் நாராயணி மருத்துவக் கல்லூரியில் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவுக் கட்டிட திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்தார். அவரது இண்டாவது நாள் பயண திட்டத்தின்படி, இன்று (மே 5) சென்னைப் பல்கலைக்கழக 160ஆவது பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.

சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், “நாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். இந்தியாவின் ஆறு குடியரசுத் தலைவர்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. மேலும் உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி” என்று புகழாரம் சூட்டினார்.

அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த், நாட்டிலேயே முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்றும் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான பங்கை அளித்ததாகவும் கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here