அரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கையை நிறுத்துவது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி மே 18 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்&' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் 1:20 விகிதத்தில் ஆசிரியர், மாணவர் விகிதம் இருந்தது. தற்போது ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 1:30, 6 ம்வகுப்பு முதல் 1:35 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்க்கின்றனர்.
பள்ளிகள் மூட காரணம்கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர்.
இதற்காக 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிய தொகை ரூ.500 கோடி.
ஆனால் அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டிய ஆசிரியர் எண்ணிக்கை, நிதி குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கை கூடாது.ஆசிரியர் உபரி பணியிடம்அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில் பந்தாடப்படுகின்றனர்.
பணிநிரவலை கைவிடவும், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், 1:20 விகிதாசாரத்தில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை, 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்களில் மே18 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக