திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்குச் செல்வதற்கு 30 அடி சாலை உள்ளது. இந்தச் சாலையில் 20 அடி வரை கலைமணி என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி பள்ளியின் தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பாஸ்கரன் முன்பு நேற்று (மே 31) விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருவதாகவும், ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளி மீண்டும் திறக்க உள்ள நிலையில் பள்ளி வேன் ஓட்டுநர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் அந்த ஆக்கிரமிப்பாளர் மிரட்டி வருவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக