*🔴சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, நாளை முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்ட கல்லுாரிகளிலும், ஒரு தனியார் சட்ட கல்லுாரியிலும், இளநிலை சட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்*
*🔴இவற்றில், பி.ஏ., எல்.எல்.பி., - பி.பி.ஏ., எல்.எல்.பி., - பி.காம்., எல்.எல்.பி., - பி.சி.ஏ., எல்.எல்.பி., ஆகிய, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளும், எல்.எல்.பி., என்ற, மூன்றாண்டு படிப்புகளும் நடத்தப்படுகின்றன*
*🔴இதற்கான மாணவர் சேர்க்கை குறித்து, பல்கலை துணைவேந்தர், சூரியநாராயண சாஸ்திரி அளித்த பேட்டி:ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' சட்டப் படிப்புக்கு, நாளை முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூன், 18க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.ஹானர்ஸ் அல்லாத, பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, ஜூன், 1 முதல் விண்ணப்பம் வழங்கப்படும்*
*🔴ஜூன், 29க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புகளுக்கு, ஜூன், 27 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை, 27க்குள் பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும்*
*🔴விண்ணப்பங்களை, 10 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்ட கல்லுாரியில், உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். நேரில் விண்ணப்பம் பெற்று, அதை அஞ்சல் வழியில் அனுப்பலாம்.மேலும், 'ஆன்லைன்' வழியிலும், இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கலாம்*
*🔴அதற்கான வசதிகள், அம்பேத்கர் பல்கலையின்,http://tndalu.ac.inஎன்ற, இணையதளத்தில் உள்ளன.மொத்தம், 11 கல்லுாரிகளில், ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில் முறையே, 1,411 மற்றும், 1,541 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்*
*🔴சரஸ்வதி தனியார் சட்ட கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டுக்கு, ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில், தலா, 39 இடங்கள் ஒதுக்கப்படும்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சட்ட கல்லுாரி மாற்றப்படுவது குறித்து, பல்கலைக்கு எதுவும் தெரியாது. அதை, சட்ட படிப்புகள் இயக்குனரகம் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்*
*என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில்முறைகேடு நடக்காது*
*🔴சட்ட பல்கலையில், என்.ஆர்.ஐ., என்ற, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில், முறைகேடு நடந்ததாக கூறி, சில மாதங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி மற்றும் முன்னாள் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன
*🔴இந்நிலையில், இந்த ஆண்டு, என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு எப்படி நடக்கும் என, துணைவேந்தர் சூரியநாராயண சாஸ்திரியிடம் கேட்டபோது, ''என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில், 'ஸ்பான்ஸர்' முறை இருக்காது. நேரடியாக வெளிநாடு வாழ் இந்தியர் குடும்பத்தினருக்கே சேர்க்கை வழங்கப்படும். எந்த முறைகேடும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து இடங்களும் ஒதுக்கப்படும். மீதம் இருந்தால், அந்த இடங்கள் பொது பிரிவில் சேர்க்கப்படும்,'' என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக