மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்குச் சிகிச்சை!  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்குச் சிகிச்சை!  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், நரம்பு அழற்சி நோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உலக நரம்பு அழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, ஆரஞ்சு நிற பலூன்களைப் பறக்கவிட்டும், இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவுரவப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், "நரம்பு அழற்சி நோய் என்பது மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் உள்ள நரம்பு செல்களில் ஏற்படும் அழற்சி நோயாகும். இந்நோயினால் பார்வை இழப்பு, கைகால் செயலிழப்பு, உணர்வின்மை, பேச்சுப் பிரச்சினைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை தொந்தரவுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நோய் எந்த வயதினரையும் தாக்கும் என்றாலும், குறிப்பாக 20 முதல் 50 வயதுடையவர்களை அதிகம் பாதிக்கிறது" என்று கூறினார்.

"உலக அளவில் சுமார் 23 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஆண்டுதோறும் 1 லட்சம் நபர்களில் 20 நபர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 2016ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 853 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய்க்கு இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்நோயினால் பாதிக்கப்பட்ட 57 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் பார்வை இழப்பினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் 31 பேர் மற்ற நரம்பியல் பிரச்சினைகளினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நோய்க்கான சிகிச்சைக்கு இதுவரை ரூ.2.3 கோடி மதிப்புள்ள மருந்துகள் நரம்பியல் துறையால் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஒரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இதன் சிகிச்சைக்காகச் செலவிடுகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here