மருத்துவ படிப்பில் 13 ஆயிரம் பேருக்கு இடம்* *🔵எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அகில இந்த - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மருத்துவ படிப்பில் 13 ஆயிரம் பேருக்கு இடம்* *🔵எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அகில இந்த

*🔵எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், 12 ஆயிரத்து, 683 இடங்கள் நிரம்பிஉள்ளன.அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன*

*🔵இந்த இடங்கள் மற்றும், நிகர்நிலை பல்கலை மற்றும், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி களில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.முதற்கட்ட கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதன் முடிவுகள், https://mcc.nic.in என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன*

*🔵இதில், 12 ஆயிரத்து, 683 பேர், மருத்துவப் படிப்புக்கான இடங்களைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள், ஜூலை, 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்*

*🔵இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 10, 11ல் நடைபெற உள்ளது.அகில இந்திய கவுன்சிலிங்கில், மருத்துவ இடம் பெற்றவர்கள், அந்த இடத்தைக் கைவிட்டால், தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்*

*🔵அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை கைவிடாத மாணவர்கள், மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என, மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் கூறினர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here