நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகள் படிப்பதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் ெதாடங்க இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் 1600 மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளன. மருத்துவ கவுன்சில் ஆப் இந்தியா அனுமதி மறுத்துவிட்டது.
2018-19ம் கல்வியாண்டுக்கு தமிழகத்தில் 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கவில்லை.
இதன் வாயிலாக இவற்றுக்கு தலா 150 வீதம் 600 சீட்கள் கிடைக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது.
இதனை போன்று நெல்லை, மதுரை அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் செட்டிநாடு மருத்துவ கல்லூரி ஆகியன சீட்கள் எண்ணிக்கையை 150ல் இருந்து 250 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தன
. அதற்கும் மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதன்வாயிலாக 300 சீட்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனைபோன்று அனுமதியை புதுப்பிக்க தமிழகத்தை சேர்ந்த 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் விண்ணப்பித்த நிலையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட வில்லை
.
இதில் மூன்று கல்லூரிகளில் தலா 150 இடங்களும், ஒரு தனியார் கல்லூரிக்கு 250 இடங்களும் என்று மொத்தம் 550 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் வாயிலாக தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கு 1450 மருத்துவ சீட்களுக்கு அனுமதி பறிபோயுள்ளது.
*🔴🔴புதிதாக அனுமதி கேட்ட மருத்துவ கல்லூரிகள்*
டாக்டர் வி.எஸ்.ஐசக் அய்யா மெடிக்கல் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் அரக்கோணம்-150 இடங்கள்
செயின்ட் பீட்டர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல் அன்ட் ரிசர்ச் சென்டர், ஓசூர்-150
டிடி மெடிக்கல் காலேஜ் அன்ட் ஆஸ்பிட்டல் -150 சிஎஸ்ஐ மெடிக்கல் காலேஜ் நெய்யூர்-150
*🔴🔴புதுப்பித்தல் கேட்ட கல்லூரிகள்*
அன்னை மெடிக்கல் காலேஜ் அன்ட் ஹாஸ்பிட்டல் தமிழ்நாடு (பேட்ச்-3) - 150 இடங்கள்
பொன்னையா ராமஜெயம் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் காஞ்சிபுரம் (பேட்ச்-3) -150
அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அன்ட் ஹாஸ்பிட்டல், சேலம் (புதிது) -150
ஸ்ரீபாலாஜி மெடிக்கல் காலேஜ் சென்னை (பேட்ச்-4) 150-250
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக