தமிழ்நாடு மீன்வள அறிவியல் பல்கலைக்கழக படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது.
இதன்கீழ் உள்ள கல்லூரிகளில் பி.எப்.எஸ்சி (இளங்கலை மீன்வள அறிவியல்), பி.இ மீன்வள தொழில்நுட்பம், பி.டெக் பயோடெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் 200 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் மே 17ம் தேதி தொடங்கியது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மீன்வள பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மீன்வள பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக