இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், 'வன்முறைகளால் ஆன செலவுகள் இந்தியப் பொருளாதாரத்தில் 1.17 டிரில்லியன் டாலராக (ரூ.80 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. நபர் ஒன்றுக்கு ஒப்பிட்டால் ரூ.40,000 செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9 விழுக்காடாகும்.
சர்வதேச அளவில் வன்முறை விளைவுகளால் ஆன செலவின் மதிப்பு 14.76 டிரில்லியன் டாலராக உள்ளது. இது உலக ஜிடிபியில் 12.4 விழுக்காடாகும். நபர் ஒன்றுக்குக் கணக்கிட்டால் இதன் மதிப்பு 1,988 டாலராக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் தீவிரவாதம், அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால் வன்முறைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளது.
உலகில் வன்முறைகளால் அதிகம் செலவிட்ட நாடுகளில் சிரியா முதலிடத்தில் உள்ளது. இந்த நாடு தனது மொத்த ஜிடிபியில் 68 விழுக்காடு வன்முறைகளுக்காக செலவிட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 63 விழுக்காடு செலவுடன் ஆப்கானிஸ்தானும், மூன்றாவது இடத்தில் 51 விழுக்காடு செலவுடன் ஈராக்கும் உள்ளது. சால்வடார் , தெற்கு சூடான். மத்திய ஆப்ரிக்க குடியரசு, சைப்ரஸ், கொலம்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் வன்முறைகளுக்கு அதிகம் செலவிடும் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.
உலகிலேயே வன்முறைகளின் விளைவுகளுக்காக குறைவாக செலவிடும் நாடாக ஸ்விட்சர்லாந்து உள்ளது. இந்தோனேசியா மற்றும் புர்கினா உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்து உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையில் சீனா 1,704.62 பில்லியன் டாலர்களும், பிரேசில் 511,364.9 பில்லியன் டாலர்களும், தென்னாப்ரிக்கா 239,480.2 பில்லியன் டாலர்களும் செலவிடுகின்றன. வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா 2.67 டிரில்லியன் டாலர்களும், ரஷ்யா 1,013.78 பில்லியன் டாலர்களும், இங்கிலாந்து 312.27 பில்லியன் டாலர்களும் செலவிடுகின்றன' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 163 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக