ரொக்கப் பணம் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த மாதத்தில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரொக்கப் பணம் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த மாதத்தில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு

தற்போது நாட்டில் 19.3 லட்சம் கோடி ரூபாய் ரொக்கப் பணம் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கறுப்புப் பணத்தை விதமாக ஒழிக்கும் மோடி அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாதவையாக அறிவித்து வங்கிகளின் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்தியாவில் புழக்கத்தில் இருந்த அதிகபட்ச உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லாதவையாக்கப்பட்டதால் நாட்டில் ரொக்கப் பணத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. வங்கிகளின் மூலம் விநியோகம் செய்யப்பட்ட புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் சரளமாகப் புழக்கத்திற்கு வர வெகு நாட்கள் ஆனது.

இந்நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் இதுவரையில் எவ்வளவு கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிடவே இல்லை. எவ்வளவு ரூபாய் திரும்பப் பெறப்பட்டது என்பதையும் வெளியிடவில்லை. ஆனால் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து ஊக்குவித்தது. ரொக்கப் பணத்தின் தேவையை இதன்மூலம் கட்டுப்படுத்திடலாம் என்றும் ஒன்றிய அரசு கணக்கிட்டது. ஆனால் இப்போது புழக்கத்தில் 19.3 லட்சம் கோடி ரூபாய் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு 7.8 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ரொக்கப் பணம் புழக்கத்தில் இருந்தது. தற்போது இதன் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ரொக்கப் பணம் இருமடங்காக அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த மாதத்தில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த ரொக்கப் பணத் தட்டுப்பாட்டுக்கு கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் உட்பட பல்வேறு காரணங்களைப் பலரும் முன் வைத்தனர். ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு செயற்கையாக நிகழ்த்தப்பட்டதாகக் கூட இருக்கலாம் எனவும், தற்போது புழக்கத்தில் 2000 ரூபாய் தாள்கள் முன்பைப் போல இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் இதுகுறித்து சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here