திமுக: களையெடுப்பு தொடங்கியது! திமுகவில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் உட்படப் பல நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவை வலிமைப்படுத்தும் நட - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திமுக: களையெடுப்பு தொடங்கியது! திமுகவில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் உட்படப் பல நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவை வலிமைப்படுத்தும் நட


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவை வலிமைப்படுத்தும் நடவடிக்கையாகக் கள ஆய்வை ஸ்டாலின் நடத்தினார். பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊராட்சி செயலாளர்கள் 11,019 பேர், பேரூராட்சி செயலாளர்கள் 507 பேர், நகர வார்டு செயலாளர்கள் 2,451 பேர், மாநகர வட்ட செயலாளர்கள் 928 பேர், சென்னை மாவட்ட பிரதிநிதிகள் 520 பேர், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் 10,461 பேர், மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் 412 பேர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் 131 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 382 பேர், ஒன்றிய செயலாளர்கள் 594 பேர், நகரச் செயலாளர்கள் 135 பேர், பகுதி செயலாளர்கள் 124 பேர், சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர். ஆக மொத்தம், 27 ஆயிரத்து 678 பேரை அவர் சந்தித்திருந்தார்.

கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்” என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனவே, திமுகவில் களையெடுப்பு எப்போது தொடங்கும் என்ற எண்ணம் அக்கட்சியினர் இடையே நிலவி வந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் இருந்து இன்று| (ஜூன் 10) களையெடுப்பு தொடங்கியுள்ளது.

கோவை, சேலம், ஈரோடு உட்பட 6 மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ரா. தமிழ்மணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தென்றல் செல்வராஜ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட வாரியான மாற்றம்

கோவை மாநகர் வடக்கு மாவட்டம்

பி.என்.புதூர் பகுதி செயலாளராக மணி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சண்முகசுந்தரம் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரிய கடை வீதி பகுதி செயலாளர் செல்வராஜ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மார்க்கெட் எம். மனோகரன் பகுதி பொறுப்பாளராகவும் காந்திபுரம் பகுதி செயலாளர் வே.உதயகுமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஆர்.எம். சேதுராமன் பகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர் தெற்கு மாவட்டம்

பீளமேடு பகுதிச் செயலாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக வே. கோவிந்தராஜ் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சுந்தரம் விடுவிக்கப்பட்டு ஜோதிபாசு பகுதி பொறுப்பாளராகவும் சரவணம்பட்டி பகுதி செயலாளர் மாணிக்கம் விடுவிக்கப்பட்டு எஸ்.பி. லட்சுமணன் பகுதி பொறுப்பாளராகவும் குறிச்சி பகுதி செயலாளர் பிரபாகரன் விடுவிக்கப்பட்டு உதயகுமார் பகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை வடக்கு மாவட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் பத்மாலயம் சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, அ.அறிவரசு ஒன்றிய பொறுப்பாளராகவும் தாளியூர் பேரூர் செயலாளர் கே.ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு ஆர்.தண்டபாணி பேரூர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை தெற்கு மாவட்டம்

பொள்ளாச்சி வடக்கு(மத்திய) ஒன்றிய பொறுப்பாளர் கே.பரமசிவம் விடுவிக்கப்பட்டுக் கோ.பாலகிருஷ்ணன் ஒன்றிய பொறுப்பாளராகவும் வால்பாறை நகர செயலாளர் கோழிக்கடை என். கணேசன் விடுவிக்கப்பட்டு பால்பாண்டியன் நகர பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் மாநகரப் பொறுப்பாளர் மேங்கோ அ.பழனிசாமி விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, டி.கே.டி.மு.நாகராசன் திருப்பூர் மாநகர பொறுப்பாளராகவும்; நல்லூர் பகுதி பொறுப்பாளர் க.இரவி விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ப.கோவிந்தராஜ் பகுதி பொறுப்பாளராகவும்; வீரபாண்டி பகுதி செயலாளர் க.சின்னசாமி விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, பி.முருகசாமி வீரபாண்டி பகுதி பொறுப்பாளராகவும்; பல்லடம் நகரச் செயலாளர் ந.ராஜேந்திரகுமார் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, வழக்கறிஞர் ம.லோகநாதன் பல்லடம் நகரப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம்

கோத்தகிரி ஒன்றிய செயலாளர் செந்தில் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, .நெல்லைக் கண்ணன் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு வடக்கு மாவட்டம்

நம்பியூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சென்னிமலை விடுவிக்கப்பட்டு, ப.செந்தில்குமார் நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளராகவும்; தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்ரமணி விடுவிக்கப்பட்டு எம்.சிவபாலன் ஒன்றிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மேற்கு மாவட்டம்

மேச்சேரி ஒன்றிய செயலாளர் ப.செல்வகுமார் விடுவிக்கப்பட்டு, எஸ்.சீனிவாசபெருமாள் ஒன்றிய பொறுப்பாளராகவும்; எடப்பாடி ஒன்றிய செயலாளர் கே.என்.பி.நல்லதம்பி விடுவிக்கப்பட்டு, மணி (எ) பூவாக்கவுண்டன் ஒன்றிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் கிழக்கு மாவட்டம்

அயோத்தியாபட்டணம் ஒன்றிய செயலாளர் ப.கௌதமன் விடுவிக்கப்பட்டு ஏ.விஜயகுமார் ஒன்றிய பொறுப்பாளராகவும்; கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் ப.காமராஜ் விடுவிக்கப்பட்டு அ.க.அகிலன் ஒன்றிய பொறுப்பாளராகவும்; தலைவாசல் ஒன்றிய செயலாளர் ப. லட்சுமணன் விடுவிக்கப்பட்டு, க.மணி (எ) பழனிச்சாமி ஒன்றிய பொறுப்பாளராகவும்; தம்மம்பட்டி பேரூர் செயலாளர் வி.பி.ராஜா விடுவிக்கப்பட்டு, ந.சண்முகம் பேரூர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம்

கொல்லிமலை ஒன்றிய செயலாளர் கு.காளியப்பன் விடுவிக்கப்பட்டு டி.பாலசுந்தரம் ஒன்றிய பொறுப்பாளராகவும்; மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.கைலாசம் விடுவிக்கப்பட்டு பி.முத்துசாமி ஒன்றிய பொறுப்பாளராகவும்; வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி

விடுவிக்கப்பட்டு .ஆர்.எம்.துரைசாமி ஒன்றிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டு செ. காந்திசெல்வன் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here