அரசின் முக்கியத் திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகக் கலந்துரையாடி வருகிறார். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளையும், வேளாண் துறையில் உள்ள சிக்கல்களையும் கண்டறிய ஜூன் 20ஆம் தேதியன்று விவசாயிகளுடன் கலந்துரையாடப் போவதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் பெற்ற சுமார் 4 கோடி பெண்களில் சிலருடன் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிறகு, சுகாதாரத் திட்டம், ஸ்டார்ட் அப் திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடினார். ஜூன் 15ஆம் தேதியன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பல்வேறு முயற்சிகளால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து விவசாயிகளுடன் ஜூன் 20ஆம் தேதியன்று கலந்துரையாடப் போவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலுக்கான தளமாகச் செயல்படுமாறு டிஜிட்டல் பொதுச் சேவை மையங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மோடி பேசுகையில், “ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, நான் விவசாயிகளுடன் கலந்துரையாட இருக்கிறேன். அந்நாளில் உங்களின் பொதுச் சேவை மையங்கள் வாயிலாக விவசாயிகளுடன் பேசவிருக்கிறேன். உங்களது பொதுச் சேவை மையங்கள் மிக சக்தி வாய்ந்தவையாக உள்ளன. நாட்டின் பிரதமரால் மூன்று லட்சம் பொதுச் சேவை மையங்கள் வாயிலாக, கிராமங்களில் உள்ளவர்களிடம் நேரடியாகப் பேச முடிகிறது” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக