நீட்' தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்புக்கு மவுசு!* இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, தொழிற்கல்வி பிரிவில், 2,249 மாணவர்கள் உட்பட, ஒரு லட்சத்து, - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட்' தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்புக்கு மவுசு!* இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, தொழிற்கல்வி பிரிவில், 2,249 மாணவர்கள் உட்பட, ஒரு லட்சத்து,


இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, தொழிற்கல்வி பிரிவில், 2,249 மாணவர்கள் உட்பட, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் பதிவுக்கு, பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

எனினும், தங்களின் கணினி மற்றும், 'லேப் - டாப்'களில் இருந்து, ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 321 மாணவர்களும், தமிழக அரசு அமைத்த, 42 கணினி உதவி மையங்கள் வாயிலாக, 12 ஆயிரத்து, 310 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, 2017ல், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதைவிட, இந்தாண்டில், 18 ஆயிரத்து, 554 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

*🔴🔴மவுசு ஏன்?*

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக, பரவலாக கூறப்பட்டாலும், இன்ஜி., படிப்பில் சேர, 2017ஐ விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது, இன்ஜி., கல்லுாரிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

இது குறித்து, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது:

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மட்டுமின்றி, 'ஆயுஷ்' எனப்படும், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில், 'சீட்' பெற முடியுமா என, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதனால், நுழைவு தேர்வு இல்லாத இன்ஜினியரிங் படிப்பில் எளிதாக சேர்ந்து விடலாம் என, பெரும்பாலான மாணவர்கள் நினைத்துள்ளனர்.

எனவே, 2017ஐ விட, 19 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here