25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இன்றைய (ஜூன் 12) சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரத்துக்குப் பிறகு விதி 110இன் கீழ் முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது; தமிழகத்தின் மின் நிறுவுதிறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது; எப்போதும் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழும் எனக் கூறினார்.

இதையடுத்து, ”தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். புதிய எரிசக்திக் கொள்கை உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் ஆயிரம் அங்கன்வாடி மையங்களும், 500 புதிய ஊராட்சிமன்றக் கட்டடங்களும் கட்டப்படும். தமிழ்நாடு ஊரகச் சாலைகள் திட்டத்தின் கீழ், 5 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஊரகப் பகுதியில் ரூ.100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 11ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன், பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு 49 நகரங்களில் கசடுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

25 புதிய துணை மின் நிலையங்கள்

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம், கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம் கோந்தகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பரலி ஆகிய மூன்று இடங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், சென்னை மாவட்டத்தில் கணேஷ் நகர் மற்றும் கே.கே.நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் எண்ணூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் மற்றும் பல்லாவரம் ஆகிய ஆறு இடங்கள், மதுரை மாவட்டத்தில் கே.புதூர், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டத்தில் கலிவேலம்பட்டி, மற்றும் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி ஆகிய நான்கு இடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தளுர், நாகை மாவட்டத்தில் ஆச்சாள்புரம், வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பணப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னதடாகம், மதுரை மாவட்டத்தில் தானியமங்கலம் மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய பத்து இடங்களிலும் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here