வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு செக்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு செக்!


பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் அதற்கான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாமலிருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறையினர் ஆயத்தமாகியுள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய மோடி அரசால் 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுத் திரும்பப்பெறப்பட்டன. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மக்கள் தங்களிடமிருந்த மதிப்பிழந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதிலும் மோசடி நடந்துவிடக்கூடாது என்பதற்காக, ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களின் கணக்கு விவரங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறாகச் சுமார் 90,000 பேருக்கு மேல் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ததாகவும், அவர்களில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களில் 2.1 லட்சம் பேர் மட்டுமே 2018 மார்ச் 31 கால வரம்புக்குள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளனர். ரிட்டன் தாக்கல் செய்யாத அனைவரின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறாகத் தற்போது சுமார் 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களுக்கு 50 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரையில் அபராதம் விதிக்கப்படும்” என்று கூறியவர், வரி ரிட்டன்களைத் தாமதமாகச் செலுத்தியவர்களுக்கு அதற்கான வட்டித் தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here