பக்தை பாலியல் பலாத்காரம்: சாமியார் மீது வழக்கு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பக்தை பாலியல் பலாத்காரம்: சாமியார் மீது வழக்கு!

டெல்லி ஷானி தாம் பகுதியில் பெண் பக்தை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் டாடி மகாராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புது டெல்லி ஷானி தாம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பக்தை ஒருவரை டாடி மகாராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் டாடி மகாராஜ் மீது அப்போழுதே வழக்கு தொடராமல் அச்சத்துடன் இருந்துள்ளார். ஆனால் தொடர்ந்து , தனக்கு மிரட்டல்கள் வந்ததையடுத்து, டாடி மகாராஜ் மீது புகார் கொடுத்தார். டாடி மகாராஜ் மீது கடந்த 10ஆம் தேதியன்று வழக்கைப் பதிவு செய்த ஃபதேபூர் பெரி காவல் துறையினர், புகாரை மாவட்டப் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து டாடி மகாராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 376 (பாலியல் குற்றங்கள்), 377, 354, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து டெல்லி பெண்களுக்கான ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் கூறுகையில் ”மஹரூரில் உள்ள ஸ்ரீ சனிதீர்த்த க்ஷேத்ரா ஆசிரமத்தில் அந்தப் பெண்ணை டாடி மகாராஜ் மற்றும் வேறு சில நபர்களும் சேர்ந்து கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினா். இச்செயல் மிகவும் கொடூரமானது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here