பட்டாசு ஆலைத் தீ: 4 பேர் கவலைக்கிடம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்டாசு ஆலைத் தீ: 4 பேர் கவலைக்கிடம்!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று (ஜூன் 15) வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் வெடிகளுக்கான ரசாயன மருந்து செலுத்தும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும்போது திடீரென தீ பிடித்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து உடனடியாகத் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரசாயன மருந்துகளால் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தில் ஊழியர்கள் ராமசாமி, முருகேசன், அழகுபாண்டி, மாரிபாண்டி ஆகிய நான்கு பேரும் கருகிய நிலையில் மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவர்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து காவல் துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here