525 புதிய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

525 புதிய தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி!


2018-19ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தொழில்நுட்பப் பிரிவில் 525 புதிய கல்லூரிகள் செயல்பட அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 45 கல்லூரிகள் புதிதாக அனுமதி பெற்றுள்ளன.

நாடு முழுவதும், 10 ஆயிரத்து 388 தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில், 525 கல்லூரிகள் இப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 347 கல்லூரிகள் பொறியியல் பிரிவின் கீழும், 178 கல்லூரிகள் பாலிடெக்னிக் பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, இக்கல்வியாண்டில் 33.85 லட்சம் இடங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் உள்ளன.

தமிழகத்தில், ஏழு கல்லூரிகள் பாலிடெக்னிக் பிரிவிலும், 38 கல்லூரிகள் பொறியியல் பிரிவின் கீழும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் செயல்படும் கல்லூரிகளில் மொத்த மாணவர்கள் சேர்க்கை, என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடம், என்பிஏ அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் உள்ளிட்ட பட்டியலும் ஏஐசிடிஇ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here