'பாரதியார் பல்கலை கல்லுாரிகளில், 62 வயதை கடந்தவர்கள், முதல்வர், சிண்டிகேட், செனட்' உள்ளிட்ட பதவிகளில் நீடிக்க முடியாது,'' என, பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
அரசாணைப்படி, 62 வயதுக்கு மேல், கல்லுாரிகளில் யாரும், முதல்வர் பொறுப்பு வகிக்க முடியாது.
கோவை, பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், விதிகளை மீறி, 65 வயது வரை, முதல்வர், சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பொறுப்புகளில் தொடர அனுமதி வழங்கப்பட்டது.
விதிமீறல் தொடர்பாக, பல்வேறு புகார் எழுந்ததால்,மே மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், 62 வயதாக மாற்றி அறிவிக்கப்பட்டது.
இதற்கு, ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி, மீண்டும், 65 வயதாக உயர்த்தப்பட்டது.
நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில், முதல்வர்களுக்கான வயது வரம்பை, தற்போது இறுதி செய்து, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவு கடிதம், நேற்று முன்தினம், பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், 62 வயதை கடந்தவர்கள், இனி, முதல்வர், சிண்டிகேட், செனட் பதவிகளை வகிக்க முடியாது.
இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக