பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 85 கோடி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 85 கோடி!

உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐநா சபையின் நிரந்தர வளர்ச்சிக்கான இலக்கு என்ற திட்டத்தின் படி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் 18 நாடுகளில் உள்நாட்டுப் போர், மோதல்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட காரணிகளால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2015ஆம் ஆண்டு 77 கோடியாக இருந்த பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில்(2018) 85 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இவர்களில் 4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் தங்களுடைய சொந்த நாடுகளை விட்டு, வெளியேறும் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருவதாக ஐநா சபை சமீபத்தில் அறிவித்திருந்தது. தெற்காசிய நாடுகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் 2030ஆம் ஆண்டிற்குள் இதற்கான தீர்வுகளைக் காண சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வர வேண்டும் என்றும் ஐநா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு(2017) பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், மிக மோசமான நிலையில், 100ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு, போதிய உணவு கிடைக்காதது போன்ற காரணங்களால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here