உணவு தானிய உற்பத்தியில் சரிவை சந்திக்கும் தமிழ்நாடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உணவு தானிய உற்பத்தியில் சரிவை சந்திக்கும் தமிழ்நாடு!

டெல்டா பாசனத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் மற்றும் பிற பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க உரிய கொள்கைத் தீர்வுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று தமிழக அரசு கையை விரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் உணவு தானிய உற்பத்தி போதுமான அளவில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

2015-16ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 113.85 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பருவமழை பொய்த்துப்போனது, கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீர் வராதது, வார்தா புயல், கடும் வறட்சி போன்ற பல காரணங்களால் அடுத்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 52.38 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் மீண்டும் உற்பத்தி அதிகரித்து 101.52 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இருப்பினும் அந்த ஆண்டில் 109.37 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டிலாவது உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்ட உரியப் பாசன வசதி கிடைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இருப்பினும் காவிரியில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்தின் பிரதான விவசாயப் பகுதியான டெல்டா மாவட்ட வேளாண் உற்பத்தி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க உரிய கொள்கைத் தீர்வை வகுக்க வேண்டியத் தேவை எழுந்துள்ளது. அதிகபட்சமாக 2014-15ஆம் நிதியாண்டில் 127.95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here