பிரபல நடிகர்கள் மீது வழக்கு..பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், ரன்வீர் சிங், சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைஃப் உள்ளிட்டோர் மீது  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிரபல நடிகர்கள் மீது வழக்கு..பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், ரன்வீர் சிங், சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைஃப் உள்ளிட்டோர் மீது 


பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், ரன்வீர் சிங், சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைஃப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், பிரபுதேவா, நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக, அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரக் கோர்ட்டில் வைப்ரண்ட் மீடியா குரூப்ஸ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைப் மற்றும் பாடகர்களான உதித் நாராயன், அல்கா யாகினிக், உஷா மங்கேஷ்கர் ஆகியோரை அழைத்திருந்தோம்.

இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்தத் தள்ளி வைத்தோம்.

இதுவரை நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையைத் திருப்பி வாங்குவதற்காகப் பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாகக் கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாகத் தர வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “இந்திய கலைஞர்கள் மற்றும் அவற்றின் முகவர்களான மேட்ரிக்ஸ் இந்தியா கேண்டிடெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யஷ்ராஜ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு, வைஃப்ரண்ட் மீடியா குரூப் போட்ட ஒப்பந்தத்தை அவர்கள் மீறியுள்ளதாகவும்” கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here