குடியரசுத் தலைவர் ஒன்பது நாள் பயணம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குடியரசுத் தலைவர் ஒன்பது நாள் பயணம்!

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒன்பது நாள் வெளிநாட்டுப் பயணமாக இன்று (ஜுன் 16) புது டெல்லியை விட்டுப் புறப்படுகிறார். கிரீஸ், சூரிநாம், கியூபா ஆகிய நாடுகளுக்கு இந்த பயணத்தின் போது செல்கிறார் ராம்நாத் கோவிந்த்.

இந்த பயணத்தில் குடியரசுத் தலைவருடன் மத்திய இரும்புத் துறை அமைச்சர் விஷ்ணு டியோ சாய், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து செல்கின்றனர்.

இந்த மூன்று நாடுகள் பயணத்தில் முதல் நாடாக கிரீஸ் செல்லும் குடியரசுத் தலைவர் அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸுக்கு செல்கிறார். அங்கே கிரீஸ் நாட்டின் அதிபர் ப்ரோகோபிஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்துப் பேசுகிறார்.

இன்று ஏதென்ஸ் செல்லும் ராம்நாத் கோவிந்த் வரும் செவ்வாய் கிழமை வரை அங்கே இருக்கிறார். அங்கிருந்து தென் அமெரிக்க நாடான சூரிநாம் நாட்டுக்குச் செல்கிறார் குடியரசுத் தலைவர். அங்கே அரசுமுறை பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களுக்குப் பிறகு மூன்று நாடுகள் பயணத்தில் கடைசி பயணமாக ஜூன் 21 ஆம் தேதி கியூபாவுக்கு செல்கிறார்.

ஃபிடல் காஸ்ட்ரோ குடும்பத்தினர் அல்லாத மைக்கேல் டியாஸ் கியூப அதிபராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட பின் முதன் முதலில் அங்கே செல்லும் இந்திய தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார். கியூபாவுடன் பயோ டெக்னாலஜி, ஹோமியோபதி, பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது.

ஒன்பது நாள் பயணம் முடிந்து கியூபாவில் இருந்து குடியரசுத் தலைவர் நாடு திரும்புகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here