ஷீரடியில் இருந்து மும்பை வந்த தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய மும்பை மாநகர போக்குவரத்து ஒட்டுநரை நேற்று(ஜூன் 15) போலீசார் கைது செய்தனர்.
மே 13 ஆம் தேதி ஆறு வயது சிறுமியின் குடும்பம் ஷீரடியிலிருந்து மும்பை செல்லும் தனியார் பேருந்தில் ஏறினர். சங்கம்நார் என்ற இடத்தில் மாநகர போக்குவரத்து ஒட்டுநர் ஒருவர் இரவு 10.30 மணிக்கு அதே பேருந்தில் ஏறியுள்ளார். ஒட்டுநருக்கு அருகே இருந்த இருக்கை காலியாக இருந்ததால், சிறுமியின் தாயார், அவரை அந்த இருக்கையில் உட்கார வைத்துள்ளார். அந்த சிறுமி உறங்கி கொண்டிருந்த வேளையில், ஒட்டுநர் அந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார்.
சிறுமிக்கு வலி அதிகமானதை அடுத்து, தன் அம்மாவிடம் அதை பற்றி கூறியுள்ளார். அதற்கு முன்பே, அந்த ஒட்டுநர் இறங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பம்,குரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையில் குற்ற பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்துவிட்டனர். அன்றைய தினத்தில் அந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்களின் பட்டியலை எடுத்து ஆய்வு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் இருக்கை உறுதி செய்யப்பட்டவுடன், அவரின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர் உகேல் என்றும், அவர் ஓஷ்வரா பகுதியில் வசித்து வருகிறார் என்றும், அவர் மும்பை மாநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஒட்டுநர் என்றும் தெரிய வந்தது. டிக்கெட் முன்பதிவு செய்தபோது, அளிக்கப்பட்டிருந்த செல்போன் எண் மூலம் அவரது இடம் மற்றும் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று போலீஸ் உகேல் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து விசாரித்தபோது, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக