இந்த கல்வி ஆண்டில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து தெளிவான பயிற்சியோ, வழிகாட்டுதலோ, குறிப்புகளோ தரப்படவில்லை.
பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா என்பதைக் குறித்து எந்தவித தெளிவான குறிப்புகளும் இல்லை. மாவட்டத்திற்குடாரத்திற்கு வட்டாரம் ,ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்றுனர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர் .
புதிய கற்பித்தல் முறையில் பாட குறிப்பு( notes of lesson )எழுதுவதா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் தாங்கள் அறிந்த கருத்துக்களை சொல்லி வருவது ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
வரும் ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தற்போது பார்வைக்கு செல்லும் அதிகாரிகளும், ஆசிரிய பயிற்றுனர்கள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முறையான வகையில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் தரப்படும்போது மட்டும்தான் தெளிவான முறையில் கற்பித்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள இயலும்.
கடந்த ஆண்டு பரிசோதனை முறையில் புதிய கற்பித்தல் முறை தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து ஒரு சில மாற்றங்களுடன் கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படலாம்.
தெளிவான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் தரப்படும் வகையில் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வந்துள்ளது என கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி கட்டாயப்படுத்தி வருவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலையும், நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்கிறது.
ஆகவே ஆசிரிய நண்பர்களே தெளிவான பயிற்சிகள் தரப்படும் வரையில் சுய கருத்துக்களை யூகமாக சொல்லி ஆசிரியர்களிடம் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதே ஆசிரியர்களுக்கு நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக