🔴தேர்வுத்துறையிலும் வந்தது மாற்றம்* தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴தேர்வுத்துறையிலும் வந்தது மாற்றம்* தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம்

தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம் வாரியாக தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வி இயக்குனரின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து தேர்வுத்துறை நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கடலுார், சேலம், வேலுார் மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அந்தஸ்தில் துணை இயக்குனர்கள் கீழ், மண்டல தேர்வுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.

பொதுத் தேர்வுகள் நடத்துவது, வினாத்தாள் வழங்குவது, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இவ்வலுவலக பணியாளர்கள் மேற்கொள்வர்.

இந்நிலையில், மண்டல அலுவலகங்களுக்கு பதில் மாவட்டம் தோறும் டி.இ.ஓ.,க்கள் தலைமையில், தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வுத்துறை மாவட்ட அலுவலகங்கள் அமைக்க கருத்துரு கேட்கப்பட்டுள்ளது.

இதன்படி டி.இ.ஓ., வின் கீழ் ஒரு கண்காணிப்பாளர், ஐந்து பணியாளர் கொண்ட அலுவலகம் அமைக்க அடிப்படை வசதியுடன் கூடிய கட்டடம் தேர்வு செய்து, அதன் விவரம் தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது," என்றார்.

'ஆடிட்' அலுவலகமும் இணைகிறது
கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை) செயல்படுகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் தலா 17 கண்காணிப்பாளர் உள்ளனர்.

இவற்றையும் மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பிரித்து அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here