தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நமது மாநில மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நீட் தேர்வின் காரணமாக, மருத்துவர்கள் ஆக வேண்டுமென்ற ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுடைய எதிர்கால கனவு சிதைக்கப்பட்டு, இனி வரக்கூடிய காலங்களில் போதிய மருத்துவாகள் கிராமங்களில் இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் மாணவர் சோக்கைக்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சோந்த மாணவாகள் 3 ஆயிரத்து 393 பேர் சேர்வதற்கு வழி உள்ளது.
நம் மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நமக்குரிய இடங்கள் நமக்குக் கிடைக்கும்.
இந்த ஆண்டு மருத்துவக் கல்வியில் மாணவர்கள் சேருவதற்கான தகவல் கையேட்டில் 12 கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நமது மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் எந்தக் காரணத்தை கொண்டும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த மாணவாகள் சேர முடியாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக