அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிகழும் வர்த்தகப் போரால் இந்தியாவில் எஃகு இறக்குமதி பெருகும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே உலகின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகப் போரில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்டீல் பொருட்களுக்கு அமெரிக்கா அதிகக் கட்டணம் விதித்துள்ளதால் அங்கு செல்லும் எஃகு பொருட்கள் இந்தியாவுக்குத் திசை திரும்ப வாய்ப்புள்ளது. சீனாவின் 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 6ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து இந்திய ஸ்டீல் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கர் சட்டர்ஜி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு இ-மெயில் மூலமாக அளித்துள்ள பேட்டியில், "அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு நடவடிக்கையால் வர்த்தகப் பரிமாற்றம் நடக்கும் வாய்ப்புள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்த ஸ்டீல் தயாரிப்பாளர்கள் அவர்களின் பொருட்களை இந்தியாவில் குவிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான ஜே.எஸ்.டபள்யூவின் இணை நிர்வாக இயக்குநர் ஷேஷாகிரி ராவ் கூறுகையில், "அமெரிக்காவின் நடவடிக்கையால் சர்வதேச ஸ்டீல் ஏற்றுமதியாளர்களில் 17 விழுக்காட்டினர் அல்லது 80 மில்லியன் டன் ஸ்டீல் பொருட்கள் இந்தியாவுக்கு வர்த்தகப் பரிமாற்றம் செய்யப்படலாம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக