சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு ( 2018-19) முதல் புதிதாக இளநிலை புள்ளியியல் பாடப்பிரிவு தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என கல்லூரி முதல்வா் சே.மீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதிய பாடப்பிரிவான பிஎஸ்சி புள்ளியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியா்களுக்கு ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு ஜூலை 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும்.
*பிஎஸ்சி புள்ளியியல் படிப்பில் சேர கல்வி தகுதி*
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி, அறிவியல் பயின்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் செ.மீனா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக