இந்தியாவில் எந்தெந்த மொழிகளை எவ்வளவு பேர் பேசுகின்றனர் என்ற புள்ளி விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது..
2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 41.03 சதவிகிதமாக இருந்த இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் 43.63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மிக அதிகமானவர்கள் பேசும் மொழிகளின் பட்டியலில் இந்தியைத் தொடர்ந்து வங்காளம் 2ஆவது இடத்திலும், மராத்தி 3ஆவது இடத்திலும், தெலுங்கு 4ஆவது இடத்திலும், தமிழ் 5ஆவது இடத்திலும் (5.89%), உருது 6ஆவது இடத்திலும், குஜராத்தி 7ஆவது இடத்திலும் உள்ளது. மிகக் குறைவானவர்களால் பேசப்படும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.
போடோ, மணிப்பூரி, கொங்கணி, தோக்ரி போன்ற மொழிகளை 24,821 பேர் மட்டுமே பேசுகிறார்கள். நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 96.71 சதவிகிதப் பேர், அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றைத் தங்களின் தாய்மொழியாகப் பயன்படுத்தி வருகின்றனர். 3.29 சதவிகிதம் பேர் மட்டுமே பிற மொழிகளை பயன்படுத்திவருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத மொழிகளில் அதிகபட்சமாக 2.6 லட்சம் பேர் பேசும் மொழியாக ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் அதிகம் பேசும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
ஆங்கிலம் பேசுவதில் தமிழகமே 2ஆவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக