அமெரிக்காவைச் சமாதானம் செய்யும் இந்தியா! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அமெரிக்காவைச் சமாதானம் செய்யும் இந்தியா!

வர்த்தகப் போர் சூடுபிடித்து வரும் சூழலில், அமெரிக்காவில் இருந்து விமானங்களையும், கூடுதல் அளவிலான எண்ணெயையும் வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து சிவில் விமானங்களை வாங்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதலை உயர்த்திக் கொள்ளவும் இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்றக் கூட்டத்தில் வர்த்தகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு அமெரிக்க வர்த்தகத் துறை பொறுப்பாளர்களைச் சந்தித்தபோது இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தார். ஜூன் 24ஆம் தேதியன்று நடக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான மார்க் லின்ஸ்காட்டுடனான இந்திய வர்த்தகத் துறை அதிகாரிகளின் சந்திப்பின் போது இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும்.

அமெரிக்காவிடம் இருந்து சிவில் விமானங்களை வாங்குவதற்கு ஆண்டுக்கு 5 பில்லியன் டாலரையும், எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதற்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலரை அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த சிவில் விமானக் கொள்முதல், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் ராணுவ விமானங்கள் ஒப்பந்தத்தைச் சேராது. ஏற்கெனவே அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 12 P8i கடற்படைக் கண்காணிப்பு விமானங்களை வாங்க இந்தியா முயன்று வருகிறது. இந்த ரக விமானங்கள் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவிடமே அதிக எண்ணிக்கையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதலை உயர்த்தி, வர்த்தகப் போரினால் ஏற்பட்டுள்ள சூட்டைத் தணிக்கவும், அமெரிக்காவைச் சமாதானம் செய்யவுமே இந்தியா முயற்சிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here