அரசு பள்ளி கம்ப்யூட்டர்களில் 'டிக் ஷா( 'diksha' )மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 'க்யூ ஆர் கோடு்' மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் முறையில் சிக்கல் உள்ளது
.இந்த கல்வியாண்டில் 6, 9, 11ம் வகுப்புக்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆர்வம், தேவையுள்ள மாணவர்கள் அப்பாடங்களை 'க்யூ ஆர் கோடு' மூலம் ஆன்-லைன் வாயிலாக படிக்கலாம். அரசுப்பள்ளி கம்ப்யூட்டர்களில் 'க்யூ ஆர் கோடு' வசதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அவற்றில் பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு, கட்டணம் செலுத்த அறிவிப்பு வருவதால், பயிற்சி, கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக