கல்வி உதவித் தொகைக்கு மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வி உதவித் தொகைக்கு மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*


மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகைக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,000 -மும், 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலுபவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலுவோருக்கு ரூ. 4 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இளங்கலைப் பட்டப் படிப்புக்கு ரூ. 6 ஆயிரமும், முதுகலைப் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.

7 ஆயிரமும் ஆண்டு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

பார்வையற்றோரின் வாசிப்பாளர்களுக்கான உதவித் தொகையாக 9 -ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையிலான நிலையில் பயிலுவோருக்கு ரூ. 3 ஆயிரமும், இளங்கலை மற்றும் முதுகலை பயிலுவோருக்கு முறையே ரூ. 5 ஆயிரமும், ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படும்.

ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அல்லது தொலைதூரக் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் இத்திட்ட உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிற துறைகளில் கல்வி உதவித் தொகை ஏதும் பெறவில்லை என்ற சான்றிதழை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்ட உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெறலாம் அல்லது n​a‌g​a‌p​a‌t‌t‌i‌n​a‌m.‌n‌i​c.‌i‌n என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here