உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் கைபேசியைக் கொடுப்பது பாதுகாப்பானது என்பதை பில்கேட்ஸ் இங்கே விளக்குகிறார். பில்கேட்ஸினுடைய மூன்று குழந்தைகளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும்படி யாரேனும் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் வீடு முழுவது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் கைபேசியைக் கொடுப்பது பாதுகாப்பானது என்பதை பில்கேட்ஸ் இங்கே விளக்குகிறார். பில்கேட்ஸினுடைய மூன்று குழந்தைகளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும்படி யாரேனும் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் வீடு முழுவது

அவர்கள் வீடு முழுவதும் சமீபத்திய மின்னணு சாதனங்கள், கேட்ஜெட்டுகள் முதலானவற்றால் நிரம்பியிருப்பது போலவும், குழந்தைகள் எண்ணற்ற நவீன பொம்மைகளையும், கைபேசிகளையும் வைத்து விளையாடுவது போலவும் சித்தரித்திருப்பீர்கள்.

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவுனரும், தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானுமான பில்கேட்ஸ் நாம் ஆச்சரியப்படும் வகையில், தன் குழந்தைகளுக்கு இந்த நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா தங்கள் குழந்தைகள் 14 வயது வரை கைபேசி உபயோகிப்பதற்குத் தடை விதித்திருந்தனர்.

2௦ வயது ஜெனிஃபர், 17 வயது ரோரி, 14 வயது ஃபீப் ஆகியோருக்குத் தந்தையான பில் கேட்ஸ் இவ்வாறு கூறுகிறார்: நாங்கள் சாப்பாட்டு மேஜையில் கை பேசி பயன்படுத்துவதில்லை. 14 வயது ஆகும்வரையில் எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கைபேசி கொடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு நாங்கள் குழந்தைகளை கணினி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் விரைவில் உறங்கச்செல்ல முடிகிறது.

டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பப் புரட்சியில் முக்கியப் பங்காற்றும் பில்கேட்ஸ், இதற்கு முற்றிலும் மாறாகத் தன் குழந்தைகள் கைபேசி முதலான நவீன உபகரணங்களைக் கையாள்வதில் ஒரு எல்லை இருக்கவேண்டும் என்று எண்ணினார்.

அதை எப்படி ஒரு சிறந்த முறையில் உபயோகப்படுத்தலாம் என்பதையே பற்றி நீ முனைந்து கொண்டிருக்கிறாய். அது எதுவாக இருந்தாலும் சரி, -வீட்டு வேலையோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து அளவளாவுதாக இருந்தாலும் சரி - இல்லை, எந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சூழல் நிலைமையை மீறுவதானாலும் சரி, அப்படியே சிந்திக்கிறாய். அவர் ஸ்மார்ட்போனைப் பற்றியும் சமூக ஊடகங்களைப் பற்றியுமே அப்படி சிந்தித்தார்.

ஆச்சரியப்படத்தக்க ஒரு உண்மை என்னவென்றால் கேட்ஸ் ஒருவர் மட்டுமே - தொழில் உலகத்திற்கே அரசனாக இருந்தவர் தங்களுடைய குழந்தைகள் தொழில் நுணுக்கத்தை அளவோடு உபயோகிப்பதை விரும்பியவர் என்பது மட்டுமல்ல.

2014-ம் ஆண்டில் ஒரு ஊடகத்தில் வந்த கட்டுரை பிரகாரம், "ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளரும், ஆப்பிள் நிறுவனத்தைத் துவக்கியவருமான ஸ்டீவ் ஜாப்ஸ், நியூயார்க் டைம்ஸ் நிருபருக்கு பேட்டி அளிக்கும்பொழுது சொன்னது - " என் குழந்தைகள் இன்னமும் ஐ-பாட் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. எங்கள் குழந்தைகள் இன்னமும் தொழில் நுணுக்கத்தை வீட்டில் கையாள்வதை எந்த அளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைக்கவே விரும்புகிறோம்."

வால்டர் இசாக்ஸன் - ஸ்டீவ் ஜாப்சின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர், ஜாப்சின் மாலை உணவைப் பற்றி எழுதும்பொழுது இப்படிச் சொன்னார் - " ஒவ்வொரு மாலையும் மாலை உணவைi தமது அடுக்களையில் எடுத்துக் கொள்ளும்பொழுது புத்தகங்களைப் பற்றியும், சரித்திரங்கள் பற்றியும் இன்ன்மும் இதர விஷயங்களைப் பற்றியுமே பேசுவார்."

எவரும் கையில் ஒரு ஐ-பாடோ அல்லது கணினியையோ வைத்திருக்கவில்லை. குழந்தைகளும் இந்த உபகரணங்களுக்கு இன்னமும் அடிமையாகி விடவில்லை.

கிறிஸ் ஆண்டர்சன் தங்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு உபகரணத்தையும் உபயோகிக்கும் காலத்தைi நிர்ணயித்திருந்தார். ஏனென்றால் தொழில் நுணுக்கத்தின் அபாயங்களைப் பற்றி தெரிந்ததே. அவருடைய ஐந்து குழந்தைகளும் படுக்கை அறையில் டீ.வி. பார்க்க அனுமதிக்கப்படவில்லை. வில்லியம்ஸ் என்கிற ட்விட்டர் மற்றும் சமூக வலைப்பதிவாளர், தனது குழந்தைகளுக்கு நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாங்கிக்கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களுக்கு ஐ-பேட் கொடுப்பதற்கு மறுத்துவிடுகிறார்.

சமீபத்திய செய்திக்கட்டுரைகள் வெளியிடுவது என்னவென்றால் உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் கைபேசி,, ஐ-பாட் போன்ற நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கத்தான் செய்கிறார்கள்.

நீங்கள் எப்படி? கணினி, கைபேசி போன்ற உபகரணங்களை உங்கள் குழந்தைகள் பயன் படுத்துவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிப்பதுண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here