விடுமுறை எடுப்பதற்கு ஊழியர்கள் விதவிதமான காரணங்களையும் சாக்குபோக்குகளையும் சொல்வதுண்டு. எனினும், உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நூதனமான காரணத்தை சொல்லி விடுமுறை கேட்டுள்ளார். அதை உயர் அதிகாரிகளாலும் நிராகரிக்க முடியவில்லை. தனது குடும்பத்தை பெருக்க வேண்டும் என்பதே அவரின் காரணம் ஆகும். அவரது, விண்ணப்பம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. எனினும் இந்த செய்தி போலியானது என்று போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது.
இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவும் விடுமுறை விண்ணப்பத்தின் படி, சோம் சிங் என்ற கான்ஸ்டபிள் குடும்பத்தை பெருக்க வேண்டும் என்ற காரணம் கூறி 30 நாட்களுக்கு விடுமுறை விண்ணப்பித்துள்ளார். மஹோபா மாவட்டத்தில் சோம் சிங் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். ஜூன் 23 தொடங்கி ஒரு மாதத்திற்கு அவர் விடுப்பு கோரியுள்ளார். இவரது சூழ்நிலையை உணர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சோம் சிங்கிற்கு கூடுதலாக 15 நாள் விடுப்பு வழங்கியுள்ளார். எனினும் இப்புகைப்படம் போலியானது என்று காவல்துறை கண்காணிப்பாளரான என்.கோலஞ்சி தெரிவித்துள்ளார்.
சோம் சிங்கிற்கு 10 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ‘நவ்பாரத் டைம்ஸ்’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சோம் சிங் விளக்கம் அளிக்கையில், வீடு கட்டும் விவகாரம் தொடர்பாக வருகின்ற ஜுன் 25 முதல் அவர் விடுப்பில் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படம் சோம் சிங்கின் விண்ணப்பம் தான் என்றும், உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்ததால் விண்ணப்பமும் அதன் தேதி உள்ளிட்ட பல விவரங்கள் மாற்றப்பட்டுவிட்டதாகவும் காவல்துறையை சேர்ந்த நம்ப தகுந்த வட்டாரங்கள் ’நவ்பாரத் டைம்ஸ்’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக