சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக ஏழு நீதிபதிகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக ஏழு நீதிபதிகள்!

!


சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூன் 1) ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயரும்.

தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் ஏழு நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அளித்தார்.

குமாரி பி.டி. ஆஷா, நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகிய ஐந்து பேர் நீதிபதிகளாகவும், சரவணன், இளந்திரையன் ஆகிய இருவரும் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 75 பணியிடங்களில் 56 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றும் நிலையில் தற்போது, நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்கிறது. எனினும் 12 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here